Wednesday 11 April 2018

எங்கு மறைந்திருக்கிறாயோ?




ஆகாய வீதியிலோ
பால்வெளியின் கர்பத்திலோ
முகில் தாயின் மடியிலோ
எங்கு மறைந்திருக்கிறாயோ? ஏனோ?

என்னில் என்ன கண்டாயோ
நடந்தாய் என்னுடன் மைல்களோ
அல்லது சின்ன சின்ன அடிகளோ
முழுகினேன் சிந்தனையில் நானோ.

பிரிந்தாய் என்னை விட்டு நொடியில்
தனியாய் நின்றேன் இவ்வுலகினில்
காணாது கண்களில் பாதைகள்
நீ சேர்ந்தபின் நட்சத்திரங்களில்

வாழ்வின் மார்க்கம் காணாது கண்களில்
நம்பிக்கை தளர்கிறது பக்தியில்
பார்வை நிற்காது வேங்கடாசலபதியில்
குருடன்போல் தடுமாறுகிறேன் பாதையில்.

பேதமில்லை வெயிலோ வெண்ணிலாவோ
எரிந்துகொண்டிருக்கிறது தீ நெஞ்சினில்
நொடி நேரம் நிம்மதி இல்லை ஆத்மாவில்
இதுபோல் இனி எத்தனை நாட்களோ, ஆண்டுகளோ?

பிழைக்கவும் இயலாது இறக்கவும் இயலாது, பிழைப்பது எவ்வாறு?
ஒரு புல் மலைபோல் தோன்றுகிறது, ஒரு நொடி யுகம் போல்.

தேடுகிறேன் முகில் தாயின் மடியிலே
தேடுகிறேன் பால்வெளியின் கர்பத்திலே
காத்திருக்கிறேன் ஆகாய வீதியிலே
எங்கு மறைந்திருக்கிறாயோ? ஏனோ?

***

No comments:

Post a Comment